தமிழ்நாடு

சென்னையை திடீர் திடீரென சுற்றி வரும் ட்ரோன்கள்: காரணம் கிருத்திகா உதயநிதியா?

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென ட்ரோன்கள் ஒவ்வொரு வீதியாக சுற்றி வருகிறது என்பதும் இதற்கு கிருத்திகா உதயநிதி எடுத்த நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது .

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கக்கூஸ் என்ற ஒரு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக இருக்கிறதா? எங்கெங்கு கழிப்பறைகள் உள்ளன? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது .

இதுகுறித்த விழா ஒன்றில் கிருத்திகா உதயநிதி கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே.இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் உத்தரவுபடி சென்னையில் உள்ள ஒவ்வொரு வீதியிலும் ட்ரோன்கள் மூலம் கழிப்பறைகள் கணக்கிடப்படுகின்றன.

சென்னையில் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியில் கழிப்பறைகள் உள்ளதா? அவ்வாறு இல்லை என்றால் எங்கெங்கு இல்லை? என்பது குறித்த கணக்கெடுப்பு தற்போது ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் 84 இடங்களில் கழிப்பறைகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

500 மீட்டருக்கு ஒரு கழிப்பறை என்றா வகையில் சென்னையில் சுமார் 500 கட்டப்பட்ட உள்ளதாகவும் இதில் மெரினா பீச் பகுதியில் மட்டும் 250 கழிப்பறை கட்டப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த உத்தரவு ஒன்றை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிறப்பித்துள்ளதாகவும், விரைவில் டெண்டர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version