இந்தியா

28 நிமிடங்களில் 40 கிமீ: மருந்து பொருட்களை சப்ளை செய்யும் ட்ரோன்!

Published

on

28 நிமிடங்களில் 45 கிலோமீட்டர் பயணம் செய்து மறந்து பொருட்களை டெலிவரி செய்யும் ட்ரோன் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அவசர கால நேரத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ட்ரோன் மூலம் கொண்டுசெல்லும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து பகுதியில் ட்ரோன் மூலம் மருந்து வினியோகம் செய்து சோதனை செய்துள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 28 நிமிடங்களில் பயணம் செய்த ட்ரோன் சரியான இடத்திற்கு மருந்து பொருட்களை கொண்டு சென்றது. இந்த ட்ரோன் சுமந்து கொண்டு சென்ற மருந்துகள் 4325 யூனிட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலைப்பகுதி அதிகமுள்ள நாகலாந்து பகுதியில் சாலை வழியாக மருந்துகளை கொண்டு செல்வது நீண்ட நேரம் ஆகும் என்பதால் அவசரமாக மருந்துகள் கொண்டு செல்வதற்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

மிகக் குறைந்த நேரத்தில் சரியான இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன்கள் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version