வேலைவாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஓட்டுநர் வேலை!

Published

on

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தின ஊதியம் அடிப்படையில் நிரப்பப்பட 5 ஓட்டுநர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: ஓட்டுநர் – 05

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 09.03.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர்32க்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 இதனைப் பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி என்ற பெயருக்குக் காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்டி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஓட்டுநர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் முதலில் இப்பல்கலைக்கழகத்தில் தின ஊதிய அடிப்படையில்(நாளொன்றுக்கு ரூ.264 வீதம்) பணியமர்த்தப்பட்டு, பணி மற்றும் நடத்தைகள் திருப்திகரமாக இருப்பின் பின்னர் அப்பணியாளர்கள் இப்பல்கலைக்கழகத்தில் ஓட்டுநர் பதவியில் அப்பதவிக்குரிய ஊதியக்கட்டு மற்றும் தர ஊதியத்தில் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப்போரூர், திருச்சிராப்பள்ளி -620 024

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.bdu.ac.in/docs/employment/driver-2019/driver-appointment-2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.03.2019

seithichurul

Trending

Exit mobile version