சினிமா

வைரலாகும் சிவகார்த்திகேயனின் கனா டிரைலர்!

Published

on

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்துள்ள கனா படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து, ஒரு சாதாரண தமிழ் பெண் எப்படி இந்திய கிரிக்கெட் அணியில், பல சவால்களை கடந்து சாதிக்கிறார், என்ற மைய கருவை வைத்து அற்புதமாக இயக்கியுள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

 

டிரைலரை பார்த்தால், எந்தவொரு காட்சியிலும் முதல் பட இயக்குநர் என தோன்றவில்லை. சிறப்பான ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளதாகவே தெரிகிறது.

டிரைலரில் சிவகார்த்திகேயன் பேசும் பன்ச்கள் வாழ்க்கை தத்துவங்களாக அமைந்துள்ளன.

ஜெயிச்சுடுவேன்னு சொன்னா உலகம் கேட்காது.. ஜெய்ச்சவன் சொன்னா தான் கேட்கும் என்ற வசனம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 24 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version