இந்தியா

பேஸ்ட் வடிவில் தங்கம்.. உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தல்.. இருவர் கைது!

Published

on

வெளிநாட்டில் இருந்து பேஸ்ட் வடிவில் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திய இருவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தங்கம் விலை நாளுக்கு நாள் உய்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் தங்கம் ஒரு கிராம் 6 ஆயிரம் ரூபாயை எட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாலும் சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டு வருதாலும் இந்தியாவில் மிக அதிகமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் இந்தியாவில் தங்கத்தை கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணையை வைத்துக்கொண்டு கண்காணித்து வந்தாலும் பலர் தங்கத்தை கடத்தி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இரண்டு இளைஞர்கள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்ததை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் வருவாய் புலல் ஆய்வு இயக்குனர் அலுவலகத்திற்கு உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து மும்பை விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்ததில் இரண்டு இளைஞர்கள் ரூபாய் 4.54 கோடி மதிப்பில் ஆன பேஸ்ட் வடிவில் 8.230 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பேஸ்ட் வடிவில் தங்கத்தை மாற்றி அதனை உள்ளாடைகள் மறைத்து வந்ததை பார்த்து சுங்கத்துறை அதிகாரிகளே ஆச்சரியம் அடைந்தனர். இருப்பினும் இது சுங்கத்துறை அதிகாரிகளால் முறியடிக்கப்பட்ட ஒரு கடத்தல் என்பது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 8 கிலோவுக்கு அதிகமாக உள்ளது என்றும் இதன் மதிப்பு 4 கோடிக்கு மேல் அதிகம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கத்தை கள்ள மார்க்கெட்டில் கடத்திக்கொண்டு வரவேண்டாம் என்றும், தங்கத்தை கடத்தல் செய்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version