இந்தியா

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

Published

on

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் டிரைவர் எவ்வலவு சம்பளம் வாங்குகிறார் என்றும் ஒரு கலெக்டர் மற்றும் எம்எல்ஏவின் சம்பளத்தை விட அது அதிகம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி நீண்ட காலமாக எளிமையாக வாழ்ந்து வருகிறார் என்பதும் அவரது அன்றாட வழக்கத்தில் எளிமை தான் அதிகமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக முகேஷ் அம்பானியின் உணவு பழக்கம் மிகவும் எளிமையாக இருக்கும் என்றும் ஒரு கோடீஸ்வரர் சாப்பிடும் உணவு போலவே அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் உணவு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க சைவ உணவையே எடுத்துக் கொள்ளும் முகேஷ் அம்பானி பெரும்பாலும் உணவுடன் பருப்பு, சப்பாத்தி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மட்டுமே சேர்த்துக் கொள்வார் என்றும் அம்பானியின் உணவு பழக்கம் நீண்ட காலமாக எளிமையாகவும் கட்டுப்பாடாகவும் இருக்கிறது என்றும் நீதா அம்பானி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அம்பானியின் தாய் பெரும்பாலும் இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுவார் என்றும் நீதா அம்பான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அம்பானி வீட்டில் சமையல்காரர் குறித்த தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பானி வீட்டு சமையல்காரர் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் அதுமட்டுமின்றி அவருக்கு பிற சலுகைகளும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களுக்கு காப்பீடு குழந்தைகளின் கல்வி கட்டணம் ஆகியவையும் அம்பானி கவனித்துக் கொள்கிறார் என்றும் தங்கள் குழந்தையை வெளிநாட்டில் படிக்க வைக்க சமையல்காரர்கள் விரும்பினால் கூட அதற்கும் அவர் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள எம்எல்ஏக்களை விட அம்பானி வீட்டில் உள்ள சமையல்காரர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சம்பளம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அம்பானி வீட்டு சமையல்காரர் ஆக சேருவது அவ்வளவு எளிது கிடையாது. பல கட்ட இன்டர்வியூக்கள் மூலம் அம்பானி வீட்டு சமையல்காரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் குறிப்பாக நம்பிக்கையானவர்கள் என்ற பெயரை பெற்ற பிறகு சமையலறைக்குள்ளே அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version