இந்தியா

லீவில் இருப்பவரை வேலைக்கு கூப்பிட்டால் ரூ. 1 லட்சம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய நிறுவனம்!

Published

on

லீவில் இருப்பவரை வேலைக்கு கூப்பிட்டால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் சம்பந்தமான எஸ்எம்எஸ் மற்றும் உரையாடல்கள் நடைபெறும் என்பதும் இது ஊழியர்களின் விடுமுறையை கெடுத்து விடும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் பல தனியார் நிறுவனங்களில் லீவு எடுத்தால் கூட தொடர்ச்சியாக அலுவலகம் சம்பந்தமான பணிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன என்றும் சிலசமயம் அவசர வேலையாக விடுமுறையில் இருப்பவர் நேரில் வரவழைக்கும் நிகழ்வு கூட நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் ட்ரீம் 11 நிறுவனம் ஒரு புதிய விதியை அமல்படுத்தி உள்ளது. இந்த விதியின்படி ஊழியர்கள் 5 நாள் முதல் 10 நாள்கள் வரை விடுமுறை எடுத்தால் கூட அவர்களுடைய விடுமுறையை கெடுக்கும் விதமாக அலுவலகத்திலிருந்து எந்தவிதமான தொடர்பும் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையின்போது ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக மன நிம்மதியுடன் இருப்பதை உறுதி செய்யவே இந்த விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறையில் இருக்கும் ஊழியர்களின் மனநிலை பாதிக்க கூடிய வகையில் எந்த விஷயங்களையும் நிறுவனம் செய்யக்கூடாது என்பதே இந்த விதியின் நோக்கமாகவும் அதையும் மீறி விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை வேலை சம்பந்தமாக தொடர்பு கொண்டால் தொடர்பு கொள்ளும் பணியாளருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ட்ரீம் 11 நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விதி தற்போது ட்ரீம் லெவன் நிறுவனத்தின் ’ட்ரீம் 11 அன்பிளக்’ என்ற பெயருடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இன்னும் ஒருசில நிறுவனங்களில் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version