தமிழ்நாடு

திராவிட மாடல் நாடு முழுவதும் பரவிவிட்டது: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதல்வர்

Published

on

தமிழகத்தில் தோன்றிய திராவிட மாடல் தற்போது நாடு முழுவதும் பரவி விட்டது என முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.

திமுக ஆட்சி தொடங்கியது முதலே திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வரும் நிலையில், இன்றைய சிலை திறப்பு விழாவிலும் திராவிட மாடல் குறித்து பேசினார்.

திராவிடம் என்பது பொருளாதாரம் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், சமூக நீதி, சமத்துவம், பெண்கள் நீதி ஆகியவை அடங்கியது என சமீபத்தில் பிரதமர் முதல்வர் ஸ்டாலின் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இன்று அவர் பேசியபோது ’திராவிட மாடல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது என்று கூறினார். 2023ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா காணவிருக்கும் கருணாநிதியின் கொள்கைகளை நாடு முழுவதும் பரப்புவோம் என்றும், திராவிட மாடல் ஆட்சி நடத்தி தமிழ்நாட்டை தலைநிமிர செய்துள்ளோம் என்றும் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்றைய தலைமுறைக்கு திராவிட மாடலை கொண்டு சேர்க்கும் வகையில் நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சிப்பட்டறை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version