Connect with us

இந்தியா

ட்ரோன் வரைவு விதிகள் 2021: பொது மக்கள் கருத்துக்காக வெளியீடு

Published

on

Camera Drones

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட – ட்ரோன் விதிகள், 2021 ஐ பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக வெளியிட்டுள்ளது. நம்பிக்கை, சுய சான்றிதழ் அளிப்பு, ஊடுருவும்-தன்மையற்ற கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள `தி ட்ரோன் விதிகள், 2021’, யுஏஎஸ் விதிகள் (மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்பட்டது) 2021-க்கு பதிலாக வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொது மக்களின் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5, 2021 ஆகும்.

ட்ரோன் வரைவு விதிகள், 2021ன் முக்கிய அம்சங்கள் :

1. பின்வரும் ஒப்புதல்கள் ரத்து செய்யப்பட்டன: தனித்துவமான அங்கீகார எண், தனித்துவமான முன்மாதிரி அடையாள எண், உறுதிப்படுத்தல் சான்றிதழ், பராமரிப்பு சான்றிதழ், இறக்குமதி அனுமதி, ஏற்கனவே உள்ள ட்ரோன்களை ஏற்றுக்கொள்வது, ஆபரேட்டர் அனுமதி, ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் அங்கீகாரம், மாணவர் தொலைநிலை(ரிமோட்) பைலட் உரிமம், தொலைநிலை(ரிமோட்) பைலட் பயிற்றுவிப்பாளர் அங்கீகாரம், ட்ரோன் போர்ட் அங்கீகாரம் போன்றவை.

2. படிவங்களின் எண்ணிக்கை 25 முதல் 6 ஆகக் குறைக்கப்பட்டது.

3. கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. ட்ரோனின் அளவுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

4. ‘அனுமதி இல்லாமல் டேக்-ஆஃப் இல்லை’ (என்.பி.என்.டி), நிகழ்நேர கண்காணிப்பு பெக்கான், ஜியோ-ஃபென்சிங் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும். இவற்றை கடைபிடிப்பதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும்.

5. டிஜிட்டல் ஸ்கை இயங்குதளம், வணிகத்திற்கு இசைவான ஒற்றை சாளர ஆன்லைன் அமைப்பாக உருவாக்கப்படும்.

6. டிஜிட்டல் ஸ்கை மேடையில் குறைந்தபட்ச மனிதத் தலையீடு இருக்கும் மற்றும் பெரும்பாலான அனுமதிகள் சுயமாக உருவாக்கப்படும்.

7. பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களைக் கொண்ட ஊடாடும் வான்வெளி வரைபடம் டிஜிட்டல் வான மேடையில் காண்பிக்கப்படும்.

8. விமான நிலைய சுற்றளவிலிருந்து மஞ்சள் மண்டலம் 45 கி.மீ முதல் 12 கி.மீ வரை குறைக்கப்பட்டது.

9. விமான நிலைய சுற்றளவில் இருந்து 8 முதல் 12 கி.மீ வரை உள்ள பகுதியில் 200 அடி வரையும், பச்சை மண்டலங்களில் 400 அடி வரையும் விமான அனுமதி தேவையில்லை.

10. மைக்ரோ ட்ரோன்கள் (வணிகரீதியல்லாத பயன்பாட்டிற்கு), நானோ ட்ரோன் மற்றும் ஆர் அண்ட் டி நிறுவனங்களுக்கு பைலட் உரிமம் தேவையில்லை.

11. இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுக்கு சொந்தமான நிறுவனங்களின் ட்ரோன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் இல்லை.

12. ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் பாகங்களின் இறக்குமதி டி.ஜி.எஃப்.டி-யால் ஒழுங்கமைக்கப்படும்.

13. எந்தவொரு பதிவு அல்லது உரிமம் வழங்குவதற்கு, முன் பாதுகாப்பு அனுமதி தேவையில்லை.

14. ஆர் & டி நிறுவனங்களுக்கு, வான்மைத்தன்மை சான்றிதழ், தனித்துவமான அடையாள எண், முன் அனுமதி மற்றும் தொலைநிலை பைலட் உரிமம் ஆகியவை தேவையில்லை.

15. 2021 ட்ரோன் விதிகளின் கீழ், ட்ரோன்களின் பாதுகாப்பு, 300 கிலோவிலிருந்து 500 கிலோவாக அதிகரிப்பட்டுள்ளது. இது ட்ரோன் டாக்சிகளுக்கும் பொருந்தும்.

16. அனைத்து ட்ரோன் பயிற்சி மற்றும் சோதனைகள், அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பள்ளியால் மேற்கொள்ளப்பட வேண்டும். டி.ஜி.சி.ஏ பயிற்சி தேவைகளை பரிந்துரைக்கும், ட்ரோன் பள்ளிகளை மேற்பார்வையிடும் மற்றும் பைலட் உரிமங்களை ஆன்லைனில் வழங்கும்.

17. வான்மைத்தன்மை சான்றிதழை இந்திய தர கவுன்சிலும், மற்றும் அது அங்கீகரித்த நிறுவனங்களும் வழங்கும்.

18. உற்பத்தியாளர் தங்களது ட்ரோனின் தனித்துவமான அடையாள எண்ணை டிஜிட்டல் ஸ்கை மேடையில் சுய சான்றிதழ் பாதை மூலம் உருவாக்கலாம்.

19. ட்ரோன்களை மாற்றுவதற்கு எளிதான செயல்முறை பரிந்துரைக்கப்படுகிறது.

20. பயனர்களால் சுய கண்காணிப்புக்காக, டிஜிட்டல் ஸ்கை மேடையில், டி.ஜி.சி.ஏ-ஆல் நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) மற்றும் பயிற்சி நடைமுறை கையேடுகள் (டிபிஎம்) பரிந்துரைக்கப்படும்.

21. 2021 ட்ரோன் விதிகளின் கீழ் அதிகபட்ச அபராதம், ஒரு லட்ச ரூபாயாகக் குறைக்கப்பட்டது. எவ்வாறாயினும், பிற சட்டங்களை மீறுவது தொடர்பான அபராதங்களுக்கு இது பொருந்தாது.

22. சரக்கு விநியோகத்திற்காக ட்ரோன் வழித்தடங்கள் உருவாக்கப்படும்.

23. வணிகத்திற்கு இசைவான ஒழுங்குமுறைக்காக ட்ரோன் ஊக்குவிப்பு கவுன்சில் அமைக்கப்பட உள்ளது.

author avatar
seithichurul
வணிகம்23 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!