தமிழ்நாடு

மூடு… மூடு… மூடு… காப்பாற்று….. காப்பாற்று….. காப்பாற்று….. டாக்டர் ராமதாஸின் வைரல் டுவீட்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டுகளை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முழு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் உடனடியாக முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்க வேண்டும்.

மூடு… மூடு… மூடு… தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு. காப்பாற்று….. காப்பாற்று….. காப்பாற்று….. கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று.

 

 

 

Trending

Exit mobile version