இந்தியா

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளராக முன்னாள் எம்பியின் மகள் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஏற்கனவே ஒரு பதவிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினராக எம்எம் அப்துல்லா என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அக்டோபர் 4 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக வேட்பாளர்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை பதவிக்கு டாக்டர் கனிமொழி அவர்கள் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் திமுக எம்பி என்விஎன் சோமு அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

என்விஎன் சோமு அவர்கள் கடந்த 1984 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றதேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகள் டாக்டர் கனிமொழி அவர்கள் தற்போது ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் இன்னொரு உறுப்பினர் பதவிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கேஆர்எஸ் ராஜேஷ் குமார் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இரண்டு திமுக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட செப்டம்பர் 22ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 27ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி என்றும், தேவைப்பட்டால் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version