சினிமா செய்திகள்

இயக்குநர் ஹரி படத்தில் நாயகியான பிரியா பவானி சங்கர்..!- நாயகிக்கு கொட்டிக் கிடக்கும் படங்கள்!

Published

on

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகிக் கொண்டேவும் இருக்கிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இயக்குநர் ஹரி படத்தில் நாயகி ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் நாயகன் ஆக நடிக்கிறார். மச்சான் ஹரி உடன் அருண் விஜய் இணைவது இதுவே முதல் முறை ஆகும். அதேபோல், நடிகர் அருண் விஜய் உடன் மாஃபியா படத்தில் நடித்திருந்த பிரியா தற்போது இரண்டாவது முறையாக அதே நாயகன் உடன் நடிக்கிறார்.

கிராமத்துக் கதையை மையமாகக் கொண்டு ஹரி- அருண் விஜய் படம் உருவாகி வருகிறது. நடிகை பிரியா பவானி சங்கரின் கைகளில் தற்போது இந்தியன் 2, குருதி ஆட்டம், பொம்மை, ஓ மணப்பெண்ணே, ருத்ரன், களத்தில் சந்திப்போம், பத்து தல, நடிகர் அசோக் செல்வன் உடன் பெயர் அறிவிக்கப்படாத படம் என படு பிஸியாக உலா வருகிறார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version