உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் வருடம் முழுவதும் ஸ்விட் இலவசம்!

Published

on

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வருடம் முழுவதும் டோனட் என்ற ஸ்வீட் இலவசம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் நிறுவனம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட ரசீதை காண்பித்தால் வருடம் முழுவதும் டோனட் என்ற ஸ்வீட் இலவசம் என அறிவித்துள்ளது. இந்த வினோத அறிவிப்பின் காரணமாக ஏராளமானோர் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு அந்த கடைக்கு வந்து டோனட் ஸ்வீட்டை வாங்கி செல்கின்றனர்.

தடுப்பூசி செலுத்தி கொண்ட ஒருவர், ஒரு வருடம் முழுவதும் எத்தனை தடவை வேண்டுமானாலும் வந்து டோனட் ஸ்வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு அமெரிக்க பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version