உலகம்

இரண்டு ஆண்குறியுடன் சிறுவன்: மருத்துவர்கள் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

இரண்டு ஆண்குறியுடன் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்ததை அடுத்து மருத்துவர்கள் அதிரடி முடிவெடுத்து அந்த சிறுவனின் ஒரு ஆண் குறியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.

உலகில் லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இரண்டு ஆண்குறிகளுடன் பிறக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டை சேர்ந்த சிறுவனுக்கு இரண்டு ஆண்குறி இருந்த நிலையில் அந்த இரண்டு ஆண்குறியுடன் அவன் வாழ்ந்து வந்தான்.

ஆனாலும் ஒரு ஆண்குறி மட்டுமே இந்த செயல்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.செயல்பாடு இல்லாமல் இருந்த ஆண்குறியில் நாளடைவில் வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அந்த ஆண்குறியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் குழு பல மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஒரு ஆண்குறியை வெற்றிகரமாக நீக்கியுள்ளது.

தற்போது அந்த சிறுவன் உடல் நலத்துடன் இருப்பதாகவும் இனி எவ்வித பிரச்சனையும் இன்றி மற்ற ஆண்கள் போலவே அந்த சிறுவன் வாழலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் 2 மற்றும் 3 ஆண்குறிகளுடன் இருந்தவர்களின் ஆண்குறிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version