சினிமா செய்திகள்

டபுள் தேவி.. டபுள் ட்ரீட்.. தேவி 2 டிரைலர் ரிலீஸ்!

Published

on

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கோவை சரளா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

2016ம் ஆண்டு வெளியான தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பேயுடன் பிரபுதேவா போடும் காண்ட்ராக்ட் என படம் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில், அந்த ஹிட் காம்போவை மீண்டும் இயக்குநர் விஜய் தேவி 2 என இயக்கியுள்ளார்.

முதல் பாகத்தில் ரூபி எனும் பேய் தமன்னா உடம்பில் பிடிப்பது போல, இந்த பாகத்தில் 2 பேய்கள் பிரபுதேவா உடம்பில் ஏறி அட்டகாசம் செய்கின்றன.

காஞ்சனா படங்களில் கோவை சரளாவின் காமெடி ஒர்க்கவுட் ஆனதால், தேவி 2வில் கோவை சரளாவை களமிறக்கியுள்ளனர்.

வரும் மே 31ம் தேதி தேவி 2 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள காமோஷி படமும் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version