கிரிக்கெட்

வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு திடீர் ஊக்கமருந்து சோதனை: இந்திய வீரர்கள் அதிர்ச்சி!

Published

on

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு நேற்று திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது இந்திய வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இதனையடுத்து தனது முதல் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணியுடன் நாளை மோதவுள்ள நிலையில் இதற்கான பயிற்சியில் உள்ளனர் இந்திய அணி வீரர்கள். நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் சோதனைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது அவருக்கு இரண்டு கட்டங்களாக ஊக்க மருந்து சோதனை நடத்தினர். முதலில் சிறுநீர் சோதனை நடத்தி பின்னர் 45 நிமிடங்கள் கழித்து இரத்த பரிசோதனை நடத்தியுள்ளனர். பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தியதை மைதான அதிகாரிகளும், இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளை தோற்றுள்ள நிலையில் நாளை இந்திய அணியுடன் மோத உள்ளது. இந்திய அணிக்கு இது தான் முதல் போட்டி. இந்நிலையில் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடைபெற்று, சோதனை குறித்த அறிக்கை வராமல் இருப்பதும் இந்திய வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பும்ராவுக்கு மட்டும் திடீர் சோதனைக்கான நடைபெற்றதற்கான காரணமும் கூறப்படவில்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version