சினிமா செய்திகள்

ஓடிடி-யில் படம் பார்க்க வேண்டாம்.. அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Published

on

திரைப்படங்களை ஓடிடி-யில் பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஓடிடி-யில் படங்கள் வெளியாவது உலகளாவிய ஒன்று. நமது அரசு காட்டுப்பாட்டுக்கு உள்ளனது அல்ல. இன்னும் சொல்லப்போனால் மாநில அரசுகள் கூட அதை கட்டுப்படுத்த முடியாது.

அதே போல நீங்கள் சொல்வது போல அதிகமான திரைப்படங்கள் ஒடிடியில் வெளியாகவில்லை. நீண்ட காலமாகத் திரை அரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால், தயாரிப்பாளர்கள் அவர்களின் பொருளாதாரத்தினை கருதி ஓடிடியில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

முதலில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படம் வெளியானது. அடுத்து சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாக உள்ளது. இது தற்காலிகமான ஒரு நிலைதான். படங்களில் இப்படி ஓடிடி பக்கம் சென்றால் திரை அரங்குகள் பெரும் அளவில் பாதிப்படையும். படங்களை வெளியிடச் சரியான சாதனம் திரை அரங்குகள்தான். எனவே தயாரிப்பாளர்களிடம் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.” என்றும் கூறியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version