சினிமா செய்திகள்

விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்: மதுரை ஆதினம் சர்ச்சை பேச்சு

Published

on

விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று மதுரை ஆதினம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக விஜய் உள்ளார் என்பதும் அவர் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விஜய் தனது படங்களில் இந்துக்களை அவமதிக்கும் வகையில் வசனங்களை பேசி வருவதாகவும், அதனால் அவரது படங்களை பார்க்க வேண்டாம் என்று மதுரை ஆதினம் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

நேற்று மதுரையில் நடந்த விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம் விஜய் தொடர்ச்சியாக தனது படங்களில் ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் வசனம் பேசி வருவதாகவும் இந்துக்களை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற சம்மதிப்பதாகவும்,அதனால் அவரது படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய்யை ஜோசப் விஜய் என்று பாஜகவினர் குறிப்பிட்டு வரும் நிலையில் மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version