உலகம்

உங்கள் தீபாவளி மகிழ்ச்சியைக் கெடுக்க வரும் டிரம்ப் விதித்துள்ள தடை!

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை வர இருக்கும் நவம்பர் 5-ம் தேதி தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்பு முழுமையாக அமலுக்கு வர இருக்கிறது.

உலகளவில் அதிகமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான். இங்கு இருந்து தான் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்து வருகிறது.

டிரம்ப் ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை முழுமையாக அமலுக்கு வரும் போது பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 85 டாலர் வரை விலை உயரும் அபாயம் உள்ளது.

அப்படி நடக்கும் போது தீபாவளி சமயத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயரும். இவை விலை உயர்ந்தால் அடிப்படைத் தேவை பொருட்கள் மீதான விலையும் உயரும்.

ஏற்கனவே விழக்காலங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். அதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு கூடுதலாகப் பட்ஜெட்டினை எகிற வைக்கும். மறு பக்கம் ரூபாய் மதிப்பு இந்தப் பொருளாதாரத் தடை காரணத்தினால் சரிய வாய்ப்புகள் உள்ளது.

தங்கம் விலையும் தாறுமாறாக உயர வாய்ப்புகள் உள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை மீதான தாக்கம் இந்தியாவில் நவம்பர் 4-ம் தேதி முதலே இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version