உலகம்

டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் – டுவிட்டர் அறிவிப்பு

Published

on

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அவருடைய இந்த பேச்சால், அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்று கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து டிரம்ப் தனது வீடியோவை டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பதவிட்டார். அவரது வீடியோ வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்ததால், அந்த வீடியோக்களை டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நீக்கின. டுவிட்டர் நிறுவனம் டிரம்பின் கணக்கை தற்காலிகமாக நீக்கியது.

இந்த நிலையில், தொடர்ந்து டிரம்ப் வன்முறையைத் தூண்டும் விதமாக செயல்பட்டதால், அது டுவிட்டர் கொள்கைக்கு எதிரானது என்று கூறி, அவரது கணக்கை நிரந்தரமாக நீக்கப்பட்டது. டிரம்பை சுமார் 88 மில்லியனுக்கும் அதிகமானோர் டுவிட்டரில் பின்தொடர்கின்றனர்.  தற்போது டுவிட்டரில் அவருடைய கணக்கு கிடைப்பதில்லை.

Trending

Exit mobile version