உலகம்

டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

Published

on

ட்ரம்பின் வன்முறை பேச்சால் அவரது ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியில் இருந்து ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ சான்று வழக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் சந்தித்து பேட்டி அளிக்கையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஜோ பைடனின் வெற்றியை தான் ஏற்க போவதில்லை எனவும் கூறினார்.

ட்ரம்ப்பின் உணர்ச்சி மிகுந்த பேச்சை கேட்ட அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். இதனை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் அமெரிக்கவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் ட்ரம்ப்பின் கருத்துகள், கலவர வீடியோக்கள் டுவிட்டர், பேஸ்புக், யூடியுப் என அனைத்து வலைதளங்களிலும் பதிவிடப்பட்டு பகிரப்பட்டன. ட்ரம்ப் தன்னுடைய தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனவும், ஜோ பைடனின் வெற்றியை தான் ஏற்க போவதில்லை எனவும் ட்வீட் செய்து இருந்தார்.

இதே போன்றே சில கருத்துகளும் ட்வீட் செய்யப்பட்டன. அவருடைய வன்முறையை தூண்டும் வகையில் உள்ள ட்வீட்களையும் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள வீடியோக்களும் ட்விட்டரில் இருந்து உடனடியாக நீக்கபட்டன. ட்விட்டரின் விதிமுறையை ட்ரம்ப் மீறியதால் அவரது தனிப்பட்ட கணக்கு 12 மணிநேரத்திற்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதே போல் வன்முறையை தூண்டும் வகையில், தேர்தல் குறித்த தவறான தகவல்களைப் பரப்பினால் அவரது @realDonaldTrump ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

seithichurul

Trending

Exit mobile version