உலகம்

அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகை! கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு!!

Published

on

அமெரிக்க காங்கிரஸ் கட்சி முன்னிலையில், ஜோ பைட்னின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்று அளிக்கும் போது திடீரென டொனல்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியில் இருந்து ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனால் அவரது வெற்றியை ஏற்றுகொள்ள முடியாமல் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடிக்கடி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ சான்று வழக்கும் பணி நடைபெற்றது. அப்போது பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான தடை இனி எதுவும் இல்லை என அமெரிக்காவின் துணை அதிபரான மைக் பென்னஸ் கூறினார்.

அந்தச் சூழலில் திடீரென ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு பெரும் திரளாகக் கூடி முற்றுகையிட்டனர். இதில் சிலர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்தினர். அதில் ஒருவர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து மேசையில் கால் வைத்தவாறு கொச்சைப்படுத்தினார்.

பிறகு அனைவரையும் கலைந்து செல்லும் படி உத்தரவிட்டப்பட்டது. ஆனால், யாரும் கலைந்து செல்லாததால்  கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending

Exit mobile version