உலகம்

டுவிட்டருக்கு மாற்றாக புதிய சமூக வலைத்தளம் தொடங்கிய டிரம்ப்: என்னென்ன வசதிகள் தெரியுமா?

Published

on

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் கருத்துக்களையும், அதிரடி அறிவிப்புகளையும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளிப்படுத்த ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். ஆனால் கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் டிரம்பின் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது

இதனால் தனது ஆதரவாளர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்து விடப்பட்ட டிரம்ப், புதிய சமூக வலைதள நிறுவனத்தை உருவாக்குவார் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தை வாங்குவார் எனச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் GETTR என்ற சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளார் டிரம்ப்.

இந்த சமூக வலைத்தளம் டுவிட்டருக்கு மாற்றாக இருக்கும் என்றும் மக்கள் திரளாக இதை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளனர். டிரம்பின் முன்னாள் செய்தி தொடர்பாளர் தான் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார் என்றும், இந்த சமூக வலைத்தளம் நாளை முதல் அதாவது ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு முறையாக பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது ப்ளே ஸ்டோரில் இதனை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து சுதந்திரத்தை காக்கும் நோக்கில் இந்த தளம் செயல்படும் என கூறியுள்ள GETTR சி.ஈ.ஓ, தற்போது உள்ள சமூக வலைதளங்களுக்கு எல்லாம் இதுதான் மாற்று எனவும் தெரிவித்துள்ளார். மேலும் டுவிட்டரில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும், 277 எழுத்துக்களைக் கொண்ட பதிவுகளை இட முடியும் என்றும், மூன்று நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும், அதே போல லைவ் ஸ்ட்ரீம் வசதியும் உண்டு என்றும் GETTR சி.இ.ஓ தெரிவித்துள்ளார். மேலும் டுவிட்டரில் பின்தொடர்பவர்களை அப்படியே இந்த தளத்தில் மாற்றி கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சமூக வலைத்தளம் உண்மையிலேயே டுவிட்டருக்கு மாற்றாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

seithichurul

Trending

Exit mobile version