உலகம்

மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது: ட்ரம்ப்

Published

on

மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளியில் செல்லும் போது கொரோனா தொற்றிலிருந்து நமது தற்காத்துக்கொள்ள மாஸ் அணிவது கட்டாயம் என உலக சுகாதார மையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று நோய் நிபுணர் ஆண்ட்ரூவ் ஃபாசில் அமெரிக்கர்கள் வெளியில் வரும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது. மக்களுக்கு சில தனிநபர் சுதந்திரம் வேண்டும். மாஸ்க் அணிந்தால் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து நம்மை கொரோனா தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று ஏற்படத் தொடங்கியதிலிருந்து, ஒரு முறை மட்டுமே பொது நிகழ்வு ஒன்றில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மாஸ்க் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version