உலகம்

டிரம்ப் புதிய கட்சி தொடக்கம்?

Published

on

முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை வீழ்த்தி ஜோபைடன் வெற்றி பெற்றார். பைடனின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தினார்.இந்த நிலையில், அமெரிக்க அதிபர் பதவியை இழந்த டிரம்ப், தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் மாறிமாறி வருவது போல், அமெரிக்காவில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் மாறிமாறி ஆட்சி புரிகின்றன. டிரம்ப் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். தற்போது அவர் அந்தக் கட்சியில் இருந்து விலகி தேச பக்த கட்சி என்ற பெயரில் புதியதொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜோ பைடன் இன்று (ஜன20 ) பதவியேற்கும் நிலையில், டிரம்பும் தனக்கென்று புதிதாக ஒரு கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளாகவும், அதில் அவரது ராஜ்ஜியமே மேலோங்கி இருக்கும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version