உலகம்

அமெரிக்க அதிபராக கடைசியாக உரையாற்றிய டிரம்ப்! போகும் போதும் நக்கலாக பேசிய

Published

on

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இன்று ஜோ பைடன் பதவியேற்கும் நிலையில், டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். முறைப்படி 21 குண்டுகள் முழங்க, சிவப்பு கம்பளத்தில் அவர் வழியனுப்பப்பட்டார்.

இதனையடுத்து பிரிவு உபசார விழாவில் டிரம்ப் உருக்கமாக பேசியாவது:’நாங்கள் ஆட்சியில் இருந்தபோது வரிவிகிதங்கள் குறைக்கப்பட்டன. மக்களிடம் வரி பாரம் இல்லாமல் நான் பார்த்துக்கொண்டேன். சிறந்ததொரு நிர்வாகத்தை அளித்தேன். மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால், ஜோ பைடன் ஆட்சியில் வரிகள் உயர்த்தப்படும் என்று நினைக்கிறேன்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்றன. கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் ஆகும் என்றனர். ஆனால், 9 மாதங்களிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாம் தொடர்ந்து தொடர்பிலேயே இருப்போம். ஆன்லைன் ஃபாரங்களில் கலந்துரையாடுவோம்’ இவ்வாறு பேசினார்.

Trending

Exit mobile version