உலகம்

முதல்முறையாக வெளியேற்றப்பட்ட டொனால்ட் டிரம்ப்: அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள்!

Published

on

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் என்ற பத்திரிக்கையில் டாப் 400 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து முதல் முறையாக டொனால்ட் ட்ரம்ப் வெளியேற்றப்பட்டிருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவர் டோனால்ட் டிரம்ப் என்பதும், அதிபர் ஆவதற்கு முன்பே அவர் பெரும் பணக்காரர் என்பதும் ரியல் எஸ்டேட் உள்பட அவர் பல தொழில்களை செய்து வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்தியாவிலும் கூட அவரது பிசினஸ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார் என்பதும் அதன் பின் அவர் பதவியை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் பதவியை இழந்தாலும் தொழிலில் அவர் சக்கரவர்த்தியாக விளங்கி வந்த நிலையில் திடீரென அவரது தொழில் மந்தமானது. அமெரிக்காவின் டாப் 400 கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்த பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த டொனால்ட், இந்த ஆண்டுக்கான பட்டியலில் அவருக்கு இடம் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டொனால்ட் டிரம்ப்சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலராக இருந்தது என்பதும் தற்போது அவரது சொத்து மதிப்பில் 400 மில்லியன் டாலர்கள் குறைவாக இருப்பதால் போர்ப்ஸ் பத்திரிக்கையின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கிரிப்டோகரன்சி உள்ளிட்ட ஒருசிலவற்றை பங்குகள் மிக அதிகமாக உயர்ந்து வருவதாகவும் அதனால் ரியல் எஸ்டேட் பங்குகள் பெருமளவில் சரிந்து வருவதாகவும் இதுவே டொனால்ட் ட்ரம்ப் பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேற்ற காரணமாக இருந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version