வணிகம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. தமிழ்நாட்டில் எவ்வளவு?

Published

on

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. எனவே 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பல இடங்களில் 1000 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

மே 17-ம் தேதி வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்தது.

இப்போது மீண்டும் மே 19-ம் தேதி முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 3.50 ரூபாயும், வணிக பயன்பாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 8 ரூபாயும் உயருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எனவே இன்று சென்னையில் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,018.50 ரூபாய் எனவும், டெல்லியில் 1,003 ரூபாய் எனவும், மும்பையில் 1002.50 ரூபாய் எனவும், கொல்கத்தாவில் 1,029 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது.

19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்து சென்னையில் 1007 ரூபாய் எனவும், டெல்லியில் 2,354 ரூபாய் எனவும். கொல்கத்தாவில் 2,454 ரூபாய் எனவும், மும்பையில் 2,306 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. 2 மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 103 ரூபாய் 50 பைசா வரை உயர்ந்துள்ளது.

காய்கறி, உணவு என அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதில் கூடுதல் சுமையை சிலிண்டர் விலை உயர்வும் ஏற்படுத்தி வருகிறது.

Trending

Exit mobile version