இந்தியா

பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு: ரோட்டில் அனாதையாக விட்டுச் சென்ற நபர்!

Published

on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாய் ஒன்று பக்கத்து வீட்டில் உள்ள நாயுடன் கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதால் அதன் உரிமையாளரால் ரோட்டில் அனாதையாக கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மூன்று வயதான வெள்ளை பொமேரியன் நாய் ஒன்று திருவனந்தபுரம் மார்க்கெட் சாலையில் அனாதையாக அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது. இதனை விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் மீட்டார். அப்போது அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டையில் ஒரு கடிதம் இருந்துள்ளது.

மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், இந்த நாய் நன்றாக இருக்கும். நன்கு பழகும். அதிக உணவு எடுத்துக்கொள்ளாது. பெரும்பாலும், பால், பிஸ்கட், முட்டை சாப்பிடும். ஒரு நோயும் இல்லை. 5 நாளைக்கு ஒருமுறை குளிப்பாட்டப்படும். ஒரே குறை என்னவென்றால் குரைக்கும். ஆனால் கடந்த மூன்றாண்டில் யாரையும் கடித்ததில்லை. இந்த நாய் பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் இது கைவிடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

பொதுவாக நாய்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அதன் உரிமையாளரால் கைவிடப்படும். ஆனால் பக்கத்துவீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் நாய் கைவிடப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை என்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன்.

seithichurul

Trending

Exit mobile version