வைரல் செய்திகள்

என்னா தைரியம்..? சிங்கங்களை மிரட்டி விரட்டிய நாய்..!- வைரல் வீடியோ

Published

on

இரண்டு சிங்கங்களை குரைத்தே நாய் ஒன்று மிரட்டி விரட்டி அனுப்பி உள்ளது. இந்த வீடியோ காட்சியை ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் ட்விட்டரில் பதிவிட அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

வன விலங்கு பூங்கா ஒன்றில் வேடிக்கை பார்க்க மக்கள் சிலர் ஜீப் ஒன்றில் பயணிக்கிறார்கள். அப்போது அருகாமையில் இரண்டு சிங்கங்கள் உலாவுகின்றன. அந்த இரண்டு சிங்கங்களையும் நாய் ஒன்று பார்த்து விடாமல் குரைக்கிறது. நாய் விடும் சத்தத்தில் அந்த இரண்டு சிங்கங்களும் மிரண்டு பின் வாங்குகின்றன. நாய் குரைத்ததால் மிரண்ட சிங்கங்கள் பின் வாங்கிச் செல்லும் வீடியோ காட்சியை ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சி தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. ட்விட்டர்வாசிகள் பலரும் வாழ்க்கையில் இந்த அளவு நம்பிக்கை இருந்தால் போதும் எதையும் வெல்லலாம் என பதிவிட்டு வருகின்றனர். வேறு சிலர் சிங்கம் என்றாலும் அதுவும் ஒரு பூனை இனம் தானே. நாய் பூனையவே வேட்டையாடும் வகை ஆச்சே என ட்விட்டரில் கமென்ட் செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version