சினிமா செய்திகள்

பயோபிக் தயாரிப்பாளருக்கு வெற்றியை கொடுக்குமா தலைவி?

Published

on

இது பயோபிக் வாரம் என தமிழ் சேனல்களில் படங்களை வெளியிடும் அளவிற்கு தொடர்ந்து பயோபிக் படங்களின் பித்து இந்திய அளவில் பிடித்துள்ளது.

இந்த பயோபிக் படங்களை தயாரிப்பதே குறிக்கோளாக வைத்துள்ளார் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி.

சமீபத்தில் தெலுங்கில் இவர் என்.டி.ஆர் கதையை வைத்து கதாநாயகடு மற்றும் மகாநாயகடு என இரு படங்களை தயாரித்தார். ஆனால், அந்த இரு படங்களும், என்.டி.ஆரின் புகழை மட்டுமே பாடுவதாகவும், அவரின் மற்றொரு முகத்தை காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ராம்கோபால் வர்மாவின் லக்‌ஷ்மியின் என்.டி.ஆர் படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு திருப்தியை அளித்தது.

இந்த இரு படங்களின் பயங்கர தோல்வியை சமாளிக்க தமிழில் ஜெயலலிதாவின் பயோபிக்கை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவராக விஷ்ணு இந்தூரி களம் இறங்கி உள்ளார்.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி எனப் பெயரிடப்பட்டுள்ள ஜெயலலிதா பயோபிக் விரைவில் வெளிவர உள்ளதாகவும், இதுதான் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ பயோபிக் என்றும் சொல்லப்படுகிறது.

இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி, நித்யா மேனனை வைத்து எடுக்கும் அயன் லேடி படமும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.

தலைவா படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல் விஜய்க்கு அப்போது ஜெயலலிதா கொடுத்த ரிலீஸ் தொல்லைகளை தாண்டி தற்போது தலைவி என ஜெயலலிதாவின் பயோபிக்கையே விஜய் இயக்குகிறார். இதெல்லாம் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் நடந்திருக்குமா என்பது பில்லியன் டாலர் கேள்விதான்.

seithichurul

Trending

Exit mobile version