இந்தியா

2 வயது சிறுவனின் வயிற்றில் எவரெடி பேட்டரி.. அதிரடி முடிவெடுத்த டாக்டர்கள்!

Published

on

இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் எவரெடி பேட்டரி இருந்ததை அடுத்து உடனடியாக அதிரடி முடிவு எடுத்து டாக்டர்கள் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து செய்து காப்பாற்றி உள்ளனர்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது குழந்தையின் பெற்றோர் திடீரென தங்கள் குழந்தையை அழுவதாக உள்ளூர் மருத்துவமனையில் காட்டியுள்ளனர். அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த உள்ளூர் மருத்துவமனை மருத்துவர் குழந்தையின் வயிற்றில் பேட்டரி இருந்ததை கண்டுபிடித்தார்.

இதனையடுத்து உடனடியாக வேறு மருத்துவமனையில் சிகிச்சை செய்ய வேண்டும் என அந்த மருத்துவர் அறிவுறுத்தியதை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள நிம்ஸ் என்ற மருத்துவமனையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டார்.

குழந்தையின் வயிற்றில் பேட்டரி இருக்கிறது என்பதை தெரிந்த உடன் உடனடியாக எண்டோஸ்கோப்பி மூலம் வயிற்றில் இருந்த பேட்டரியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனார். காலதாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதை புரிந்து கொண்ட மருத்துவர்கள் உடனடியாக ஆபரேஷன் தியேட்டரை தயார் செய்து குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்தனர்.

சுமார் இருபது நிமிடங்களில் எண்டோஸ்கோபி மூலம் பேட்டரி குழந்தையின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும் குழந்தை தற்போது நலமாக ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிவி ரிமோட்டில் பயன்படுத்தப்பட்ட 5 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 1 சென்டி மீட்டர் அகலம் கொண்ட பேட்டரியை குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது விழுங்கிவிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது குழந்தை நலமாக இருப்பதை அடுத்து பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் மருத்துவர்களுக்கு தங்கள் நன்றியையும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version