சினிமா செய்திகள்

OTT-யில் ரிலீஸாகும் ‘டாக்டர்’!!!

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படம் சென்ற ஆண்டே வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் ரிலீஸ் தேதி தள்ளித் தள்ளிப் போனது. கடந்த பிப்ரவரி மாத வாக்கில், மார்ச் மாதம் டாக்டர் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் வந்ததால், ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

அதைத் தொடர்ந்து மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா இரண்டாவது அலை காரணமாக, திரையரங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டாக்டர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்போது அமேசான் ப்ரைம் டாக்டர் படத்துக்கு 42 கோடி ரூபாய் தருவதாக சொல்லியுள்ளதாம். இந்த பெரிய தொகையால் தயாரிப்பாளர் ஓடிடிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாம். நெல்சன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படத்தில் பணி செய்த அனைவரும் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

seithichurul

Trending

Exit mobile version