சினிமா செய்திகள்

நெட்பிளிக்ஸில் ‘டாக்டர்’ ரிலீஸ் தேதி இதுதான்!

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘டாக்டர்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்னவாக இருக்கும் என்று திரையுலக வட்டாரத்தில் விசாரித்தபோது இந்த படம் மே 13ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் திரையரங்கில் வெளியான ஒரே மாதத்தில் ‘டாக்டர்’ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்றும் அதாவது ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

எனவே மே 13ஆம் தேதி நெட்பிளிக்ஸில் திரைப்படம் திரையரங்கிலும் ஜூன் 13ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை நெல்சன் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version