சினிமா

மாஸ்டரை காலி செய்த டாக்டர்…அமெரிக்காவிலும் வெற்றிக்கொடி ஏற்றிய சிவகார்த்திகேயன்…

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. குறிப்பாக குடும்பம் குடும்பமாக இப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

தியேட்டரில் 50 சதவீத இருக்கைகு மட்டுமே அரசே அனுமதி அளித்துள்ளது. ஆனால், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை தவிர்த்து மற்ற சிறிய தியேட்டர்களில் இது கடைபிடிக்கப்படவில்லை. எனவே, தியேட்டர் அதிபர்களுக்கு இப்படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

doctor

முதல் நாளே இப்படம் ரூ.7 கோடி வசூல் செய்ததாகவும், இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துவிட்டதாகவும், 4 நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், டாக்டர் திரைப்படம் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. அதோடு ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாட்டு வசூலையும் டாக்டர் படம் குவித்து வருகிறது. எல்லாம் சேர்த்து ஏறக்குறைய ரூ.75 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் டாக்டர் திரைப்படம் இதுவரை 440 ஆயிரம் டாலர்களை வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பு விஜயின் மாஸ்டர் திரைப்படம் அமெரிக்காவில் 439 ஆயிரம் டாலர்களை வசூல் செய்திருந்தது. எனவே, சிவகார்த்திகேயன் விஜயை பீட் செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் பல மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் டாக்டர் படத்தின் வசூல் அப்படக்குழுவினருக்கும், சினிமா உலகினருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Trending

Exit mobile version