சினிமா செய்திகள்
‘டாக்டர்’ டிரைலரை பார்த்து அசந்து போன சிவகார்த்திகேயன்: நெல்சனுக்கு பாராட்டு!
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன என்பது தெரிந்ததே. இன்று இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும் இந்த ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ‘டாக்டர்’ படத்தின் டிரைலரை சிவகார்த்தியன் உட்பட படக்குழுவினர் அனைவரும் பார்த்து அசந்து விட்டதாகவும் குறிப்பாக டிரைலரின் எடிட்டிங் பக்காவாக இருந்ததாக நெல்சன் மற்றும் எடிட்டருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 26 ஆம் தேதி ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் என்பதால் டீசர் இல்லாமல் நேரடியாக டிரைலர் மட்டும் வெளியிட்டு விட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் 10 நாட்களில் இந்த படத்தின் மொத்த பணிகளும் முடிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.