கேலரி

வசூலில் சாதனை படைத்த டாக்டர்… எத்தனை கோடி தெரியுமா?…

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. குறிப்பாக குடும்பம் குடும்பமாக இப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

தியேட்டரில் 50 சதவீத இருக்கைகு மட்டுமே அரசே அனுமதி அளித்துள்ளது. ஆனால், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை தவிர்த்து மற்ற சிறிய தியேட்டர்களில் இது கடைபிடிக்கப்படவில்லை. எனவே, தியேட்டர் அதிபர்களுக்கு இப்படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

முதல் நாளே இப்படம் ரூ.7 கோடி வசூல் செய்ததாகவும், இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் தற்போது 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ரூ.25 கோடி வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கில் பல மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் டாக்டர் படத்தின் வசூல் அப்படக்குழுவினருக்கும், சினிமா உலகினருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

‘டாக்டர்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகிய போது அனைவரும் ஆச்சர்யமாக சனிக்கிழமை ரிலீஸ் செய்வதை பார்த்தனர். ஏனெனில், வழக்கமாக வெள்ளிக்கிழமையில்தான் படங்களை ரிலீஸ் செய்வார்கள். ஆனாலும் டாக்டர் திரைப்படம் திரையுலகின் வழக்கமான செண்டிமெண்டை உடைத்து வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version