சினிமா

கேரளாவிலும் கால் பதித்த சிவகார்த்திகேயன்… விஜய்க்கு போட்டியா?….

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. குறிப்பாக குடும்பம் குடும்பமாக இப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

தியேட்டரில் 50 சதவீத இருக்கைகு மட்டுமே அரசே அனுமதி அளித்துள்ளது. ஆனால், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை தவிர்த்து மற்ற சிறிய தியேட்டர்களில் இது கடைபிடிக்கப்படவில்லை. எனவே, தியேட்டர் அதிபர்களுக்கு இப்படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

முதல் நாளே இப்படம் ரூ.7 கோடி வசூல் செய்ததாகவும், இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துவிட்டதாகவும், 4 நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்ததாகவும், 10 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. அதோடு ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாட்டு வசூலையும் டாக்டர் படம் குவித்து வருகிறது. எல்லாம் சேர்த்து ஏறக்குறைய ரூ.75 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், கேரளாவிலும் மாஸ்டர் திரைபடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு அங்கு வெளியானது. எனவே, இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கமாக விஜய் படம்தான் கேரளாவில் நன்றாக ஓடும். தற்போது சிவகார்த்திகேயன் படமும் அங்கு வரவேற்பை பெற்றுள்ளது.

இதைப்பார்க்கும் போது கேரளாவில் விஜய்க்கு போட்டியாக சிவகார்த்திகேயனும் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version