சினிமா செய்திகள்

புதிய சாதனை படைத்த ‘செல்லமா…’ பாடல்- SK தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்!

Published

on

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்பட ‘செல்லமா’ பாடல் யூட்யூப் தளத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரக் காத்திருக்கும் திரைப்படம் டாக்டர். இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் SK தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கிறது. இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் செல்லமா பாடல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ஒரே இரவில் வைரலானது.

அனிருத் இசையில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் பாடிய இப்பாடலை எழுதியவர் சிவகார்த்திகேயன். 74 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெற்றி பெற்றுள்ள இப்பாடல் மற்றும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. யூட்யூப் தளத்தில் இப்பாடலை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

இதையடுத்து இச்சாதனையை நடிகர் சிவகார்த்திகேயன் பெருமையுடன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி அனிருத், ஜோனிடா, நெல்சன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version