தமிழ்நாடு

நீங்கள் நடத்துவது அரசா அல்லது சர்க்கஸா? நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கேள்வி

Published

on

நீங்கள் நடத்துவது அரசா அல்லது சர்க்கஸா? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றிரவு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 1.1 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இன்று காலை திடீரென வட்டி குறைப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதற்கு அவர் விளக்கம் நிர்மலா சீதாராமன், தனது கவனத்திற்கு வராமல் இந்த அறிவிப்பு வெளியாகி விட்டதாக கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் என்பவர் நிர்மலா சீதாராமனின் இந்த விளக்கத்திற்கு கிண்டலடித்துள்ளார்.

நீங்கள் நடத்துவது அரசா அல்லது சர்க்கஸா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் அறிவிப்பு கவனக்குறைவாக வெளிவந்து விட்டது என்று கூறுகிறீர்களே இது நியாயமா என்று கேட்டார். இதுபோன்ற குளறுபடிகளை செய்துள்ள நிதி அமைச்சரை நிதியமைச்சர் இனியும் பதவியில் தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version