சினிமா செய்திகள்

பிகினி செல்ஃபியில் இருக்கும் இந்த கிளாமர் குயின் யாரு தெரியுமா?

Published

on

முன்னாள் ஆபாச பட நடிகையாக இருந்து, இப்போது இந்திய அளவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் நம்ம சன்னி லியோன் தான் இந்த செல்ஃபியில் இருக்கும் அந்த கிளாமர் குயின்.

ரொம்ப நாளைக்குப் பிறகு, இப்படியொரு பிகினி செல்ஃபியை வெளியிடுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், கத்திரி வெயிலுக்கு இதமாக இந்த கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களை குதூகலப் படுத்தியுள்ளார்.

பாலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய சினிமாக்கள் பக்கமும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது வாழ்க்கை வரலாறு பயோபிக் வெப் தொடரான கரஞ்சித் கவுர் 2வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மம்முட்டி நடிப்பில் உருவான மதுர ராஜா படத்தில் செம குத்து டான்ஸ் ஒன்று போட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஜெய்ப்பூரில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட செல்ஃபியை சன்னி லியோன் ரசிகர்களுக்காக வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version