சினிமா செய்திகள்

கே.ஜி.எஃப் 2 வில்லன் யார் தெரியுமா?

Published

on

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் கே.ஜி.எஃப். இந்த படத்தின் மெயின் வில்லன் கதாபாத்திரமான ஆதிரா குறித்த பதிவை முதல் பாகத்தில் படக்குழு காண்பித்திருப்பார்கள்.

ஆனால், ஆதிரா யாரென்று காண்பித்திருக்க மாட்டார்கள். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்திரா காந்தி மற்றும் ஆதிரா வேடத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்திரா காந்தியாக ரவீனா டாண்டன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ ரிவீல் செய்யப்படவில்லை.

ஆதிராவாக சஞ்சய் தத் நடிப்பார் என்று தகவல்கள் வெளியானவாறே தற்போது அதிகாரப்பூர்வமாக அதனை வெளியிட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version