சினிமா செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் ’25’ டைட்டில் என்ன தெரியுமா?

Published

on

1962-ம் ஆண்டு டாக்டர் நோ எனும் தலைப்பில் முதல் ஜேம்ஸ் பாண்ட் வெளியானது. இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் பல்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டியுள்ளது.

இந்நிலையில், டேனியல் கிரெய்க் நடிப்பில் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக உருவாகி வரும் 25வது ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. No Time To Die என அட்டகாசமான தலைப்பை இந்த படத்திற்கு வைத்துள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இனி நான் நடிக்க மாட்டேன் என அழாத குறையாக டேனியல் கிரெய்க் தெரிவித்த போதும், இறுதியில் அவரையே மீண்டும் சம்மதிக்க வைத்து இந்த படத்தை படக்குழு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி இங்கிலாந்தில் இந்த படம் வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் ஏப்ரல் 8ம் தேதி ஜேம்ஸ் பாண்ட் உளவு பார்க்க உள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version