சினிமா செய்திகள்

பட வாய்ப்புக்காக நடிகை நமீதா என்ன செய்தார் தெரியுமா?

Published

on

பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை நமீதா, தற்போது மீண்டும் பட வாய்ப்புக்காக தன் எடையை குறைத்துக்கொண்டு வருகிறார்.

2004 ல் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை, நமீதா. பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம்வந்தார். தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

பின்னர், நீண்ட நாட்கள் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால், பிக்பாஸ் சீசன் 2வில் நுழைந்தார். அதற்கு பிறகு தனது நண்பனான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துக்கொண்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை வந்ததால் ஜிம்மிற்கு சென்று 15 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார், நமீதா.

பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நோக்கத்திலேயே இதனையெல்லாம் செய்து வருகிறார் நமீதா. மச்சனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்களேன்!

seithichurul

Trending

Exit mobile version