பர்சனல் ஃபினான்ஸ்

செக் புக் விதிகளில் மாற்றம்.. இதை செய்யவில்லை என்றால் உங்கள் செக் செல்லாது தெரியுமா?

Published

on

செக் புக் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை தவிர்க்க 2021 ஜனவரி மாதம் முதல் பாசிட்டிவ் பே அமைப்பு (Possitive Pay System) விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

பாசிட்டிவ் பே அமைப்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக நாம் ஒருவருக்கு அளிக்கும் செக்கின் விவரங்களை (செக் எண், யாருக்கு விநியோகிக்கப்பட்டது, எவ்வளவுத் தொகை மற்றும் செக் தேதி) இணையதளம், மொபைல் அல்லது நேரடியாக வங்கிகளை அணுகி அளிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் நாம் ஒருவருக்கு அளிக்கும் செக் செல்லாமல் போய்விடும்.

முதலில் ஐசிஐசிஐ வங்கிகளில் இந்த பாசிட்டிவ் பே அமைப்பு முறை செக் விநியோகிக்கும் போது பின்பற்றி வந்தனர். ஜனவரி மாதம் முதல் இந்த முறையை அனைத்து வங்கிகளிலும் பின்பற்ற வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தி வருகிறது.

ஒருவேலை செக் விநியோகம் குறித்த தகவலை வங்கிக்கு தெரிவிக்கவில்லை என்றாலும் வங்கிகள் அந்த வாடிக்கையாளர்களை அழைத்து செக் குறித்த தகவலை உறுதி செய்ய வேண்டும்.

அப்போது வாடிக்கையாளர் அழைப்புகளை ஏற்கவில்லை என்றால், வாடிக்கையாளர் விநியோகித்த செக் செல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளது.

எனவே செக் விநியோகிக்கும் முன்பு அதன் விவரங்களை வங்கிக்குத் தெரிவிப்பதுதான் சரியானது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதை செய்வதால் செக் மோசடிகள் நடைபெறுவது குறைவாக உள்ளது என தரவுகள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version