சினிமா

தீவிர உடற்பயிற்சியில் நித்யாமேனன்.. ஏன் தெரியுமா?

Published

on

மலையாள இயக்குநர் ஷகீர் காதர் இயக்கும் தடகள வீராங்கனை படத்தில் நித்யா மேனன் நடிக்கவுள்ளார். அதற்காக தற்போது ஜிம்மிலேயே குடி கொண்டு தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

சற்று குண்டாக இருக்கும் நித்யாமேனன் தடகள வீராங்கனை கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க முடியும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்துள்ள நித்யா, இந்த உடல் எடையை வைத்துக் கொண்டு எப்படி தடகள வீராங்கனையாக நடிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இயக்குநர் ஷகீர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் என்னை ஒப்பந்தம் செய்துள்ளார்.

அவரது நம்பிக்கையை வீணாக்க மாட்டேன். கடுமையாக பயிற்சி செய்து தடகள வீராங்கனைக்கு ஏற்ற உடல் எடையை பெற்று இந்த படத்தில் நிச்சயம் நடிப்பேன். எனது ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து நிச்சயம் ஆச்சர்யப் படுவார்கள் என கூறியுள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version