பர்சனல் ஃபினான்ஸ்

ரூ.50,000 முதலீடு செய்தால் ரூ.3,300 பென்ஷன்.. எப்படி?

Published

on

ஓய்வுக்குத் திட்டமிடுபவர்கள் பல்வேறு முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். அதில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டம்.

இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த முதலீடு முதிர்வு அடையும் போது அந்தத் தொகையும் திரும்பக் கிடைத்துவிடும்.

எனவே அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டம் மூலம் ஓய்வுக்குத் திட்டமிட்டால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மாதாந்திர வருமான திட்டம்

1) அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர முதலீடு திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு 6.6 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.

2) இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்தும் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 3 பேர் இணைந்து இந்து திட்டத்தில் முதலீட்டைச் செய்யலாம்.

3) மாதாந்திர முதலீடு திட்டத்தில் 100 அல்லது 1000 ரூபாய் பெருக்கலில் முதலீடு செய்ய முடியும்.

4) குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம்.

5) ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 3,300 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும்.

6) 5 வருடம் முதலீடு செய்யும் போது முதிர்வடையும் போது 16,500 ரூபாய் வட்டி வருவாய் கிடைக்கும்.

7) 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 6,600 ரூபாய் அல்லது மாதத்திற்கு 550 ரூபாய் பென்ஷனாக கிடைக்கும்.

8) அதே போல 4.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 2475 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 29,700 ரூபாய் அல்லது 1,48,500 ரூபாயை வட்டி வருவாயாக முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும்.

9) அதிக பென்ஷன் வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு முதலீடு தொகை மாறும்.

குறிப்பு: மாதாந்திர வருமான திட்டம், ஒரு வகையான ஓய்வு திட்டம் மட்டுமே. இதில் வரும் தொகை குறைவாக உள்ளது என நினைப்பதை விட, இது போல பல்வேறு வகையான முதலீட்டுத் திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

seithichurul

Trending

Exit mobile version