சினிமா செய்திகள்

விராட் கோலி இன்ஸ்டாகிராம் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Published

on

பிரபலங்கள் சமுக வலைத்தளங்களில் அதிக நபர்களால் பின்பற்றப்படுகின்றனர். அது அவர்களது ரசிகர்களுடனான நெருக்கத்தை அவர்களுக்கு அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல் அதன் மூலம் விளம்பரங்களைப் பதிவிட்டு பணம் சம்பாதிக்கும் இடமாகவும் அதை மாற்றி வருகின்றனர். அதனை Influncer Marketting என அழைக்கின்றனர்.

அப்படி உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்களை அதிக நபர்கள் பின்பற்றும் போது அவர்களைத் தொடர்புகொள்ளும் வணிக நிறுவனங்கள், அவர்களின் தயாரிப்பு அல்லது வணிகம் குறித்து இவர்களது சமுக வலைத்தள பக்கங்களில் பதிவிடக் கோடி கணக்குகளில் பணத்தை வழங்குகின்றனர்.

அப்படி இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்பற்றப்படும் 50 பிரபலங்கள் மற்றும் அவர்கள் அதில் ஒரு வணிக ரீதியிலான பதிவை வெளியிட எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து விராட் கோலியும், நடிகை பிரியங்கா சோப்ராவும் டாப் 50-க்குள் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோலி ஒரு பதிவுக்கு 6,80,000 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய் கட்டணமாகப் பெருக்கிறாராம். இந்த பட்டியலில் விராட் கோலி பிடித்துள்ள இடம் 19.

நடிகை பிரியங்கா சோப்ரா 27வது இடத்தை பிடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா ஒரு பதிவுக்கு 4,03,500 டாலார், இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

இந்தப் பட்டியலில் 16,04,000 அமெரிக்க டாலருடன் (இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய்) கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version