ஆரோக்கியம்

இதப் பண்ணுங்கள் மூச்சுத்திணறல், சளி பிரச்சனை நீங்கும்!

Published

on

கற்பூரவள்ளி அறிவியல் பெயர் பிளெக்ட்ரான்டஸ் அம்போயினிகஸ் மற்றும் ஒருமுறை அது கோலியஸ் அம்போயினிகஸ் என அடையாளம் காணப்பட்டது. கற்பூரவள்ளி ஆங்கிலத்தில் இந்தியன் போரேஜ் என்றும் அழைக்கப்படுகிறது.

மூச்சுத்திணறல், அல்சர் குணமாக

 

கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து 5.மி.கி., அளவு தினமும் காலையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.

கடுகு எண்ணெய்யில் வெற்றிலையைப் போட்டுச் சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.

பருத்திப் பாலை வெறும வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.

இதப் பண்ணுங்கள் தலை வலி குறைய:

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

குழந்தைகளுக்குக் கொடுங்கள்! சளி பிரச்சனை நீங்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை கலந்த திரிகடுகு சூரணத்தை கால் தேக்கரண்டிக்கும் குறைவாக எடுத்து, அதில் தேன் கலந்து, காலை உணவுக்குப் பின் குழந்தைகளுக்குக் கொடுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

இதை வாரம் இருமுறை மட்டுமே வழங்க வேண்டும். கற்பூரவல்லி செடியின் இலையை அரைத்து, அதைச் சாறு எடுத்து வாரம் இரு முறை கொடுத்தால் சளி பிரச்சனை நீங்கும்.

ஆஸ்துமா உள்ளவர்கள்:

குளிர்காலத்தில் ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவு 8.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். இட்லி, இடியாக்கும், தோசை, சிறுதானிய கஞ்சி என எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இரவு 10 மணிக்குப் படுத்துவிடவும்.

ஆஸ்துமா வந்தால் கற்பூரவல்லி, கரிசலாங்கண்ணி, துளசி ஆகியவற்றைக் கலந்து கஷாயம் செய்து தேன் அல்லது கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவ குறிப்புகள்:

விளக்கெண்ணெய்யில் மஞ்சள்தூளைக் குழைத்து காலில் உள்ள வெடிப்புகளில் பூசி வந்தால் விரைவில் வெடிப்புகள் மறைந்துவிடும்.

மாதவிடாய் கோளாறுள்ள பெண்கள் உணவில் அதிக அளவில் வெந்தயக் கீரையைச் சேர்த்து வருவது நல்லது.

கற்பூரவல்லி இலையில் 2 மிளகையும், ஒரு கல்லுப்பையும் வைத்து மத்து மென்றுதின்றால் தொண்டைக் கரகரப்பு சரியாகிவிடும்.

கற்பூரவள்ளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

* 100 கிராம் கற்பூரவள்ளியில்,
* 4.3 கிராம் கொழுப்பு,
* 25 மிகி சோடியாம்,
* 1,260 மிகி பொட்டாசியம்,
* வைட்டமின் ஏ (34%),
* கால்சியம்(159%),
* வைட்டமின் சி (3%),
* இரும்புச்சத்து (204%),
* வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%)
* 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது.
கற்பூரவள்ளி இலைகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையையும். இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் எண்ணிக்கை குறையும்.

seithichurul

Trending

Exit mobile version