சினிமா செய்திகள்

ஓட்டுப் போட மிஸ் பண்ணாதீங்க – விஜய்சேதுபதி அட்வைஸ்!

Published

on

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்த வாரம் சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், படம் குறித்த பிரஸ் மீட்டில் இன்று கலந்து கொண்ட விஜய்சேதுபதி, மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் வருகிறது. யாரும் மிஸ் பண்ணாம ஓட்டு போடுங்க.. உங்களுக்கு யாரையும் பிடிக்கலைன்னாலும், அதையும் தெரிவிக்க ஓட்டுப் போடுங்க.. ஓட்டுப் போடாம சும்மா மீம்ஸ் போடுவதில் மட்டும் இருந்து விடாதீங்க என்று கூறினார்.

மேலும், பொள்ளாச்சி சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, அந்த பெண்ணின் 10 செகண்ட் கதறலை நம்மால், கேட்க முடியவில்லை. தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை விரைவில் கிடைக்கணும் என்றார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர்டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தது பற்றிய கேள்விக்கு, அது ரொம்ப கஷ்டம், ஒரு நாள் அந்த கெட்டப்பில் வீட்டுக்கு போனதை பார்த்து என் பொண்ணு அழுதுட்டா… அந்த கெட்டப் எனக்கு பெண்கள் மீதான மதிப்பை மேலும் அதிகரித்தது என விஜய் சேதுபதி தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version